புதுடெல்லி: 18 வயது பூர்த்தி யான ஆண் வாக்களிக்கவும் ராணுவத்தில் சேரவும் அனு மதிக்கப்படும்போது ஏன் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கக்கூடாது. தற்போது ஆணின் திருமண வயது 21ஆக உள்ளது. இதை 18ஆக குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததுடன் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்குத் தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஆணின் திருமண வயதைக் குறைக்கக் கோரியவருக்கு ரூ.25,000 அபராதம்
1 mins read

