தங்கச்சங்கிலி கேட்ட மணமகனுக்கு மொட்டை

தங்கச்சங்கிலி கேட்ட மணமகனுக்கு மொட்டை

1 mins read

லக்னோ: மணப்பெண்ணிடம் இருந்து தான் கேட்டபடி வர தட்சணை எதுவும் கிடைக்காததால் அப்பெண்ணைக் கரம்பிடிக்க மறுத்த மணமகனை ஒரு அறை யில் அடைத்து வைத்து அவரது தலையை பாதியாக மொட்டை அடித்துவிட்டுள்ளனர். மணமகனை அவமானப்படுத் தும் விதத்தில் நடந்துள்ள இச் சம்பவம் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் வரதட்சணையாகத் தரவேண்டும் என மணமகன் கேட்டதாக மணமகளின் குடும் பத்தினர் புகார் கூறினர்.

மணமகனை ரகசியமாக சிறை பிடித்துச் சென்ற மணமகளின் உறவினர்கள் அவரது தலையில் மொட்டையைப் போட்டுவிட்டனர். மணமகளின் பாட்டி ஏஎன்ஐ ஊடகத்திடம் கூறியபோது, திரு மணத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் இந்த வரதட்சணை வேண்டுமென்று மணமகன் கேட்டார். இதைக் கொடுக்க முடி யாது என்று கூறியதும் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். ஆனால், அவரது தலையை யார் மொட்டை அடித்தது என்று எங்களுக்குத் தெரியாது," என்றார். இந்நிலையில் போலிசாரின் விசாரணை தொடர்கிறது.