புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் நிலையங்களின் உரிமையாளர்கள் நேற்று 400 பெட்ரோல் நிலையங்களை மூடி போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசலுக்கான 'வாட்' வரி விதிப்பைக் குறைக்காததைக் கண்டித்து நேற்று காலை 6 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து 23 மணி நேரத்திற்கு நீடித்தது.
இதனால் பெட்ரோல் போடு வதற்காக வந்த கார்கள், வேன், லாரி, டாக்சி, ஆட்டோ, ஸ்கூட்டர் உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் பெரும் அவதிக் குள்ளாகினர். இப்படி ஒரு போராட்டம் நடத் தப்படுவதற்கு அசிங்கமான அர சியலை நடத்தி வரும் பாஜகவின் சூழ்ச்சியே முக்கிய காரணம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
"டெல்லி அரசுடன் 'வாட்' வரி குறைப்பு குறித்து நாங்கள் நடத் திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே எங்களுக்கு வேலை நிறுத்தம் அறிவிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை," என்று டெல்லி பெட்ரோல் விற் பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஷால் சிங்கானியா என்டிடிவி ஊடகத்திடம் தெரிவித்தார்.
"பாஜகவின் தூண்டுதலால் இந்தப் போராட்டம் நடத்தப்படுவ தாக பெட்ரோல் நிலைய உரிமை யாளர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசியபோது கூறினர். "தொடர்ந்து மக்களை அவ திக்கு உள்ளாக்கும் வகையிலான தரக்குறைவான அரசியலில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்ச் சிக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்," என்று கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் 4ஆம் தேதி மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை ரூ.2.50 குறைத்தது. இதுகுறித்து டுவிட்டரில் கெஜ்ரிவால், "கலால் வரியை 10 ரூபாய் அதிகரித்து, 2.50 ரூபாய் மட்டும் பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது மத்திய அரசு. இது போலியான நடவடிக்கை," என்று சாடினார்.
முதல்முறையாக பெட்ரோலைவிட டீசல் விலை அதிகரிப்பு நாட்டில் முதல்முறையாக ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒடிசாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.65க்கும் டீசல் ஒரு லிட்டர் அதைவிட 13 காசுகள் அதிகமாக அதாவது ரூ.80.78க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஐந்தாவது நாளாக நேற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் குறைந்தது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.44க்கும் டீசல் விலை லிட்டருக்கு 27 காசு கள் குறைந்து ரூ.74.92க்கும் விற்கப்பட்டது.

