கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு: முக்கிய சாட்சி மரணம்

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு: முக்கிய சாட்சி மரணம்

1 mins read

சண்டிகார்: சண்டிகாரில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டாசுயா நகரில் உள்ள செயிண்ட் மேரி தேவாலய வளாகத்தில் உள்ள அறையில் பாதிரியார் குரியாகோஸ் கட்டுத் தாரா நேற்று இறந்துகிடந்தார். பாதிரியார் குரியாகோஸ், கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட் டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ முல்லக்காலுக்கு எதிராக அறிக்கை அளித்திருந்த முக்கிய சாட்சி ஆவார். இப்போது அவர் திடீரென்று மர்மமான முறையில் பஞ்சாப்பின் ஹோசியார்பூர் மாவட்டத்தில் இறந்து கிடந்ததன் மூலம் அவரது மரணத்தில் மர்மம் நீடிப்பதாக போலிசார் கூறியுள்ளனர்.

"எங்களது குழுவினர் 67 வயது பிஷப்பின் மரணம் நடந்த இடத்திற்கு தீவிர விசாரணை நடத்துவதற்காகச் சென்றுள்ள னர்," என்று டாசுயா நகரப் போலிஸ் அதிகாரி கூறினார். முக்கிய சாட்சியான இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சந்தேகத்தை எழுப்பி உள்ளதால் இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஜலந்தர் டயோசிஸுக்கு உட்பட்ட தேவா லயத்தில் பிராங்கோ முல்லக்கல் பிஷப்பாக இருந்தார். இவர் அங்கு பணிபுரியும் கன்னியாஸ் திரி ஒருவரை 2014 முதல் 2016 வரை பலமுறை பாலியல் பலாத் காரம் செய்த புகார் தொடர்பில் கைதாகி, பிணையில் வந்தார்.