பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரைக் கண்டித்துப் போராட்டம்

பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரைக் கண்டித்துப் போராட்டம்

1 mins read
Google News Preferred Icon

நாகப்பட்டினம்: மாணவி களுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக பேராசிரியரைக் கண்டித்து நாகையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த புத்தூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு திருவாரூரை சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் பணியற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதுடன் தொடர்ந்து பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவிகள் நேற்று வகுப்பைப் புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.