வேலூர்: ஆலாங்காயம் பகுதியில் ரூ.21,000 கள்ளநோட்டுகளைப் பறி முதல் செய்த போலிசார், இதை வைத்திருந்த மூவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்ற முயன்றபோது பிடிபட்டனர். வேலூர் மாவட்டம், ஆலாங் காயம் பகுதியில் சிலர் கள்ள நோட்டுகளை மாற்றி வருவதாகத் தனிப்படை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளநோட்டுக் கும்பல் கைது
1 mins read

