சென்னை: 'மீடூ' விவகாரம் மக் கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப் பட்டு வரும் நிலையில், இப்போது ஒரு புதிய பாலியல் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சிக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து அமைச் சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில் ஜெயக்குமார் மீது தேசிய மகளிர் ஆணையம், மனித உரிமை ஆணையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ்பாபு புகார் மனு அளித்துள்ளார். சுரேஷ்பாபு அளித்துள்ள புகாரில், "மீன்வளத்துறை அமைச் சர் டி.ஜெயக்குமாரிடம் உதவி கேட்டுச் சென்ற ஒரு பெண்ணைக் கர்ப்பவதி ஆக்கிவிட்டார். இதைத் தொடர்ந்து கர்ப்பத்தைக் கலைக்கு மாறும் பெண்ணை மிரட்டியுள்ளார்.
அதற்கு அவர்கள் மறுத்துவிட்ட னர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய குரல் பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. "ஜெயக்குமார் பெயரில் குழந் தைக்கான பிறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர் பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது காவல் துறையினர் அதை ஏற்கவில்லை. "எனவே அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி க்கு உத்தரவிட வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு அமைச்சர் ஜெயக்குமாருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல், "குழந்தையை அமைச்சர் ஜெயக் குமார் ஏற்றுக்கொண்டு சொத்தில் பங்கு தரவேண்டும். "குரல் தன்னுடையது இல்லை என்றுதான் ஜெயக்குமார் கூறி னார், குழந்தை தன்னுடையது இல்லை என்று கூறவில்லை "ஜெயக்குமார் எத்தனை பெண்களிடம் தவறிழைத்துள்ளார் என்பதற்கு என்னிடம் பட்டியலே உள்ளது. அதை வெளியிட்டால் பிரச்சினையாகிவிடும்," என்று கூறியுள்ளார்.

