தினகரனின் 18 எம்எல்ஏக்களும் குற்றாலத்தில் முகாம்

1 mins read
0244477f-8d08-41b2-99e6-a87bd0ca86eb
-

திருநெல்வேலி: 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எழுதி முடித்து விட்டதாகவும் நாளை 25ஆம் தேதி இத்தீர்ப்பை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் தங்கத் தமிழ்ச் செல்வன், சுப்பிரமணியன், கதிர் காமு, பழனியப்பன், மாரியப்பன் கென்னடி, பிரபு, சுந்தர்ராஜ் உள் ளிட்ட 18 எம்எல்ஏக்களும் குற்றா லத்தில் உள்ள இசக்கி தங்கும் விடுதியில் முகாமிட்டுள்ளனர்.

நீதிபதிகள், இந்த 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்தால் 18 பேருக்கும் எம்எல்ஏ பதவி திரும்பக் கிடைத்துவிடும். இதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனி சாமி சட்டமன்றத்தில் பெரும்பான் மையை நிரூபிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் களின் 18 தொகுதிகளும் இடைத் தேர்தலை சந்திக்க வேண்டியிருக் கும். இதனால் தீர்ப்பு எப்படி இருப்பினும் அது தமிழக அரசிய லில் பரபரப்பூட்டும் என்று கூறப் படுகிறது. தகுதிநீக்க வழக்கில் முன்பு இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றம் செய்யப் பட்டது. 3வது நீதிபதி நாளை வியாழனன்று தீர்ப்பை வெளியிடு வார் என்று கூறப்பட்டுள்ளது.

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கும் தினகரனின் 18 எம்எல்ஏக்களும் குற்றாலத்தில் உள்ள இசக்கி தங்கும் விடுதி யில் முகாமிட்டுள்ளனர். படம்: ஊடகம்