விருதுகளைக் குறிவைக்கும் 'தொரட்டி'

விருதுகளைக் குறிவைக்கும் 'தொரட்டி'

2 mins read
699eb09f-2c11-43e9-9552-ee3028108f7f
-

பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்று வருகிறது 'தொரட்டி'. ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த 1980களில் ராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத் தில் நடந்த உண்மைச் சம்பவங்க ளின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கி உள்ளனராம்.

இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடைபோடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்ன ணியில் அமைந்துள்ள இந்தக் கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர். "படத்தில் நடித்த ஒவ்வொரு வரும் அந்தந்த கதாபாத்திரங்க ளுக்காக கிராமப் பகுதியில் மூன்று மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அப்பகுதி மக்களுடன் இரண்டரக் கலந்துவிட்டனர். அதன் மூலம் பெற்ற அனுபவங்க ளின் துணையோடு தங்களுக் கான கதாபாத்திரமாகவே மாறி திரையில் வாழ்ந்துகாட்டியுள்ளனர்," என்கிறார் தயாரிப்பாளர் ஷமன்.

அண்மையில், அமிர்தசரஸில் நடைபெற்ற அனைத்துலக திரைப் பட விழாவில் நடந்த திரையிடலின் முடிவில், இதுவரை திரையில் அதிகம் காட்டப்படாத ராமநாத புரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அன்பை, காதலை, உறவுகளின் உணர்வுகளை, கரு வறுக்கும் கோபத்தை இயல்பாக வும் உயிரோட்டத்தோடும் பதிவு செய்துள்ளதாக அனைவரும் எழந்து நின்று கைதட்டி பாராட்டி சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை படத்துக்கு ஒளிப்பதிவு செய்த குமார் ஸ்ரீதருக்கு அளித்துள்ளனர்.

இதே போல் செக்கோஸ்லோவேகியாவில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது இப்படத்தின் நாயகனான ஷமன் மித்ரூவுக்கு வழங்கப் பட்டுள்ளது. மேலும் பல திரைப்பட விழாக்களில் இப்படம் பங்கேற்க உள்ளது. "எனவே மேலும் சில விருது களுக்காக காத்திருப்பதாக படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரி வித்துள்ளனர்.

'தொரட்டி' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.