ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த நிர்மலா, சர்மிளா ஆகிய இரு சகோதரிகளும் மும்பை அருகில் உள்ள விராரைச் சேர்ந்த சகோதரர்கள் சஞ்சய் ராவல் மற்றும் வருண் ராவல் ஆகிய இரண்டு பேருக்கும் 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டனர். ரூ 5 லட்சம் வாங்கி வரும்படி அவ்விரு பெண்களையும் கணவன் வீட்டார் கட்டாயப்படுத்தி சித்திரவதை செய்தனர். ஆனால் அவர்கள் வரதட்சணை வாங்கி வரவில்லை. இதனால் இரண்டு மருமகள்களையும் கணவன் வீட்டார் அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர். அதோடு அப்பெண்கள் இருவரையும் அடையாளம் தெரியாத ஒருவருடன் மும்பைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர், ''உங்களை ரூ1.50 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியுள்ளேன்.
அதனை வசூலிக்கும் வரை விடமாட்டேன்'' என்று தெரி வித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் கள், அந்த நபரிடம் இருந்து தப்பித்து வந்து, போலிசில் புகார் அளித்துள்ளனர். அப்பெண்களின் கணவன்கள், மாமனார் மோகன்லால், மாமியார் லீலாதேவி மற்றும் உற வினர்கள் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

