ஹைதராபாத்: செவ்வாய்க்கிழமை மட்டும் வீடுகளில் கொள்ளை யடிக்கும் வித்தியாசமான பழக்கம் கொண்ட கொள்ளையர்கள் இரு வர் ஹைதராபாத் போலிசிடம் சிக்கினார்கள். இது குறித்து ஹைதராபாத் காவல்துறை ஆணையர் அஞ்சனை குமார் நிருபர்களிடம் கூறு கையில், "ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக ஆகிய 3 மாநிலங்களில் பூட்டியிருக்கும் வீடுகளில் செவ்வாய்க்கிழமை மட்டும் அதிகமாகக் கொள்ளையடிக்கும் சம்பவம் நடந்து வந்தது.
"இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தியபோதிலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. "இந்நிலையில், கடந்த சனிக் கிழமை வாகனச் சோதனையின் போது இரு சக்கர வாகனத்தில் வந்த முகமது சமீர்கான், முகமது சோகைப் ஆகிய இருவர் போலிசிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரி வித்தனர். "காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று முறைப்படி விசாரணை நடத்தியதில் அவர்கள் செவ்வாய்க்கிழமை மட்டும் கொள் ளையடிக்கும் வழக்கத்தை கொண் டிருப்பதாகத் தெரிவித்தனர்.
"இதையடுத்து, நாங்கள் விசாரணை நடத்தி வந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தியபோது அந்த வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். "இந்த இரு கொள்ளையர்களும் செவ்வாய்க்கிழமை மட்டும் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத் துள்ளனர். "மற்ற நாட்களில் திருடினால் போலிசிடம் சிக்கிக்கொள்வோம் என்ற நம்பிக்கை இருந்ததால் மற்ற நாட்களில் இவர்கள் கொள் ளையடிப்பது இல்லை," என்று கூறினர்.

