வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிபிஐ இயக்குநரின் அதிகாரம் பறிப்பு

வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிபிஐ இயக்குநரின் அதிகாரம் பறிப்பு

1 mins read

புதுடெல்லி: இறைச்சி வியாபாரி மொயின் குரே‌ஷி மீதான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரு கிறது. மொயின் குரே‌ஷியிடம் இருந்து தரகர் வழியாக ராகேஷ் அஸ்தானா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என புகார் எழுந்தது. இதில் திடீர் திருப்பமாக, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. சிபிஐயில் இரண்டாவது இடத்தில் உள்ள அவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது இதுவரை இல்லாத நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், ராகேஷ் அஸ்தானாவின் அதிகாரம் பறிக்கப்பட்டதாகவும் அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட எல்லா விசாரணைகளையும் அலோக் வர்மா எடுத்துக்கொண்டதாகவும் தகவல் வெளி யாகியுள்ளது.