பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

1 mins read

புதுடெல்லி: இந்தியா முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடை யில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இதுதொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு: 1) தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். 2) கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இரவு 11.30 மணி முதல் இரவு 12.30 மணி வரை மட்டுமே வெடி வெடிக் கலாம். 3) வெடிக்கப்படும் வெடி அனுமதிக்கப்பட்ட அளவில் மட் டுமே இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற் படுத்தாத பட்டாசுகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும். பட்டாசுகளுக்கு மாற்று குறித் தும் ஆலோசிக்க வேண்டும். 4) தடை செய்யப்பட்ட எந்த ஒரு பட்டாசையும் வெடிக்க அனு மதி இல்லை. அவை விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பகுதியின் காவல்துறை அதி காரிகளே பொறுப்பு 5) பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளவீடு செய்ய வேண்டும். 6) டெல்லி மற்றும் தலைநகர் பகுதி களில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளபோதிலும் அதனால் ஏற்படும் காற்று மாசை அளவீடு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.