சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 61 ஆயிரம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட உள்ளது. சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும்படி தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போக்கு வரத்து விதிகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் போக்குவரத்துத் துறை ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு 61 ஆயிரத்து 504 பேரின் உரிமத்தை தமிழக போக்குவரத்து போலிசார் முடக்கி வைத்துள்ளனர்.
இவற்றில் முதல் முறை விதிமீறியோரின் உரிமம் மூன்று மாதங்கள் வரையும் மூன்று முறைக்கு மேல் விதி மீறி யோரின் உரிமம் நிரந்தரமாகவும் ரத்து செய்யப் படும் வாய்ப்பு உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறுகையில், "தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் உள்ளன. வெளிநாடுகளில் உள்ளதுபோல அனைவரும் 'ஒரிஜினல் லைசென்ஸ்' வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் விதிமீறுவோரின் உரிமத்தை ரத்து செய்யமுடியும்," என்றார்.

