சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 'இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்' என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சிகாகோ நகரில் செனட்டர் டேவிஸ் தலைமையில் நடைபெறும் 8வது ஆண்டு பன்னாட்டு கலாசார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம் சார்பில் 'இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத் திரம்' என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதோடு சிகாகோ, வாஷிங்டன், பாஸ்டன் நகர் தமிழ்ச் சங்ககளின் அழைப்பை ஏற்று கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள் கிறேன். அரசியல், மருத்துவ, சமூக சேவைகளில் அனைத் துலக அளவில் சிறந்த செயல்பாடுடைய பெண்களை இந்த அமைப்பு தேர்வு செய்கிறது," என தெரிவித்துள்ளார்.
'அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்': தமிழிசைக்கு விருது
1 mins read

