எல்லா கோயில்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை: அமைச்சர்

எல்லா கோயில்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை: அமைச்சர்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: தமிழக கோயில்கள் அனைத்திலும் பிளாஸ்டிக் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன் கூறினார். "இத்திட்டம் மற்ற கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும். தமிழக அரசின் அறிவிப்பை செயல் படுத்தும் முனைப்புடன் தமிழக கோயில்கள் அனைத்திலும் பிளாஸ்டிக் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பிரசாதங்களை பிளாஸ்டிக் பைகளில் வழங்குவதை தவிர்த்து பேப்பர் பிளேட், பாக்கு மட்டை மற்றும் துணிப் பைகள் போன்றவற்றை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பசுமை கோயில் திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்," என்றார் அவர்.