‌ஜப்பானியப் பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

‌ஜப்பானியப் பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

1 mins read
Google News Preferred Icon

ஷின்ஸே„ அபே கட்டியணைத்து வரவேற்றார். ஃபுஜி மலைச்சாரலில் உள்ள தனது விடுமுறை கால மாளிகை யில் மோடிக்கு ‌ஷின்ஷோ அபே வின் குடும்பத்தினர் தனி விருந்து அளித்துக் கௌரவித்தனர். பிரதமர் மோடியைத் தவிர வேறு எந்த நாட்டுத் தலைவருக்கும் தனது வீட்டில் ‌ஷின்சோ அபே தனி விருந்து அளித்ததில்லை. 13வது இந்தியா-ஜப்பான் உச்ச நிலை மாநாட்டில் கலந்துகொள் வதற்காக இரண்டு நாள் பயண மாக பிரதமர் மோடி தோக்கியோ சென்று சேர்ந்தார். '

இந்தியாவும் ஜப்பானும் "வெற்றி கரமான கூட்டணி" என்று வர்ணித்த பிரதமர் மோடி, பொரு ளாதார, தொழில்நுட்ப நவீனமய மாக்கத்தில் புதுடெல்லியின் மிக வும் நம்பிக்கையான பங்காளி யாக ஜப்பான் விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். திரு அபே, யமனாசி நகரில் உள்ள தனது விடுமுறை கால இல்லத்தில் பிரதமர் மோடிக்கு விருந்து வைத்து உபசரித்தார். முதல் முறையாக அபேயின் இல்லத்தில் மோடிக்கு தனிப்பட்ட முறையில் விருந்தளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் தோக்கியோவுக்கு ரயிலில் பயணம் செய்தனர்.