ராகுல் காந்தி: உழைப்பவர்களுக்கே முதலிடம்; மற்றவர்களுக்கு அல்ல

ராகுல் காந்தி: உழைப்பவர்களுக்கே முதலிடம்; மற்றவர்களுக்கு அல்ல

1 mins read
Google News Preferred Icon

துடெல்லி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விமானம், ஹெலிகாப்டர் கள், பாரசூட் ஊர்தி போன்ற வற்றில் பறந்து வருபவர்களுக்கு எல்லாம் இடம் வழங்கமுடியாது. கடும் உழைப் பாளிகளுக்கே இடம் வழங்கப்படும் என்று இளைஞர் காங்கிரஸ் நிர் வாகிகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத் துள்ளார். இதனால் கோஷ்டி தலை வர்களின் ஆதரவாளர்கள் கலக் கம் அடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் தேசிய அளவில் புதிய நிர்வாகிகளை நியமித்து, காங்கிரஸ் கட்சிக்கான பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளார் ராகுல். அனைத்து மாநில இளைஞர் காங்கிரசாரும் ஆறு மாதத்திற்கு தங்கள் குடும் பத்தை மறந்து தேர்தல் பணிகளில் ஈடுபட வேண் டும் எனவும் அவர் உத்தரவிட் டுள்ளார். இளைஞர் காங்கிரசை நாடு முழுவதும் பலப்படுத்தும் வகையில் 'யுவசக்தி' என்ற திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கு மேற்பட்ட இளை ஞர்களை உறுப்பினராக்கும் திட் டத்தையும் அவர் வகுத் துள்ளார்.