சிங்கப்பூர் விமானம் 9 மணி நேரம் தாமதம்

சிங்கப்பூர் விமானம் 9 மணி நேரம் தாமதம்

1 mins read

திருச்சி: சிங்கப்பூர் செல்ல திருச்சி விமான நிலையம் வந்த பயணிகள் ஒன்பது மணி நேரம் தாமதம் காரணமாக கடும் அதிருப்தி அடைந்தனர். நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 4 மணியளவில் சிங்கப்பூர் செல்ல இருந்தது ஏர் இந்தியா விமானம். அதில் பயணம் மேற் கொள்ள இருந்த பயணிகள் பலர் உரிய நேரத்தில் விமான நிலையம் வந்திருந்தனர். இந்நிலையில், விமானம் புறப் பட தாமதமாகும் என அறிவிக்கப் பட்டது.

ஒன்றிரண்டு மணி நேர தாமதமாக இருக்கும் என்று நினைத்த பயணிகளுக்கு ஏமாற் றமே மிஞ்சியது. சுமார் 9 மணி நேர தாமதத்துக்குப் பின்னர், நள்ளிரவு ஒரு மணியளவிலேயே அந்த விமானம் இயக்கப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தில் குளிர்கால அட்டவணைப்படி விமா னங்கள் புறப்படும் நேரம் மாற்றப் பட்டதாகவும், அதன் காரணமா கவே சிங்கப்பூர் விமானம் தாமதமா னது என்றும் கூறப்படுகிறது.