கனவில்கூட நடக்காது: சீறும் சீமான்

கனவில்கூட நடக்காது: சீறும் சீமான்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: ஆன்மீக அரசியல் என்பதும் ஒரு வகையில் மத உணர்வுதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி ஆட்சியைப் பிடிப் பார் என்பது மனநலம் பாதிக்கப் பட்டவர்களின் கனவில் கூட நடக் காது என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். "சாதி, மத உணர்வு இருப் பவர்கள் தமது மன்றத்தில் இருக்க வாய்ப்பற்றவர்கள் என்கிறார் ரஜினி. அப்படியானால் அவர் கட்சி தொடங்கத் தகுதியற்றவர். ரஜினியே ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு ஓடுபவர்," என்று சுட்டிக் காட்டினார். ரஜினியின் கொள்கை, நிலைப் பாடு, முடிவுகள் என எதுவுமே சரியாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், ரஜினி இன்னும் கட்சிப் பெயரைக் கூட அறிவிக்கவில்லை என்றார்.

"தன் கட்சிக்கான கொடி, கொள்கைகள் குறித்தும் அவர் இதுவரை ஏதும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் அரசியலுக்கு வந்த உடனே அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? ரஜினி மீதான அபிமானத்தால் சிலர் இப்படி சொல் கின்றனர். எங்களைப் பார்த்து எத்தனை பேர் கேலி செய்தாலும் வளர்ச்சி பாதித்தாலும் வீழ்ச்சி கண்டாலும் தனித்துப் போட்டி யிடுவோம்," என்றார் சீமான்.