தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர் பான வழக்கை சிபிஐ விசாரிக்க இந்திய உச்ச நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறை யின் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை முதல்வரின் உற வினர்களுக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் ஒதுக் கியதாகவும் அதன்மூலம் ரூ.4,833 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடுத்தது.
இம்மாதம் 9ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் இந்த மனு விசா ரணைக்கு வந்தபோது, திமுக வின் புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் முதல்வரை விசாரிக்கத் தேவையில்லை என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.
ஆனால், முதல்வர் மீதான வழக்கை பொதுவான அமைப்பே விசாரிக்கவேண்டும் என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் தங்களைக் கேட் காமல் எந்த உத்தரவையும் பிறப் பிக்கக்கூடாது என்று திமுகவும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

