இந்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட இரு நாள் அதிரடிச் சோதனைகளில் மொத்தம் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள நூறு கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது தொடர் பாக எழுவர் கைது செய்யப்பட் டனர். அண்டை நாடுகளில் இருந்து தரைவழியாகக் கடத்தி வரப்பட்ட 55 கிலோ தங்கத்தை மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் அதி காரிகள் பறிமுதல் செய்தனர். தங்கக் கட்டிகளை வாகனத்தில் மறைத்து எடுத்து வந்த இருவரை யும் அவர்கள் கைது செய்தனர்.
வாகனத்தின் ஓட்டுநர் இருக் கைக்கு அடியில் துளை போட்டு, தங்கக் கட்டிகள் மறைத்து எடுத்து வரப்பட்டன. அவை ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை கொண்டிருந்த தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல தலா ஒரு கிலோ எடைகொண்ட 34 தங்கக் கட்டி களை புதுடெல்லி ரயில்வே நிலை யத்தில் அதிகாரிகள் கைப்பற்றி னர். இச்சம்பவம் தொடர்பாக பூட்டானைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைதாகினர். அந்தத் தங்கக் கட்டிகள் அனைத்தும் சீனா, சுவிட்சர்லாந்து நாடுகளில் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது.
மேலும் நான்கு சம்பவங்களில் கொழும்பு, சிங்கப்பூரில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூரு, இந்தூர் ஆகிய நகரங்களுக்கு வந்த விமானங்களில் கடத்தி வரப் பட்ட 13 கிலோ தங்கம் பிடிபட்டது. "பண்டிகைக் காலம் நெருங்கு வதால் இந்தியாவில் தங்கத்திற்கு அதிக தேவை இருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தங்கமும் வெளிநாட்டுப் பணமும் கடத்தப்படுவது அதிக ரித்துள்ளது," என்று வருவாய்ப் புலனாய்வுத் துறை தெரிவித்தது. இதற்கிடையே, மலேசியாவில் இருந்து ரூ.2.27 கோடி மதிப்பு உடைய ஏழு கிலோ தங்கத்தை 'மைக்ரோவேவ் அவன்' சாதனத் தில் மறைத்து எடுத்து வந்த இருவர் சென்னை விமான நிலை யத்தில் நேற்று பிடிபட்டனர்.

