கனிமொழி: பெண்கள் முன்னேற ஆண்கள் துணை நிற்க வேண்டும்

1 mins read

சென்னை: பெண்களின் முன்னேற்றத்துக்கு ஆண்கள் உறு துணையாக இருக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சமூகத்தில் அரசியல், பொது என அனைத்துத் தளங்களிலும் பெண்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்றார். "அனைத்துத் துறைகளிலும் ஏதாவது ஒரு சூழலில் பெண்கள் பாலியல் தொல்லைகளைக் கடந்து வரவேண்டி உள்ளது. நாட்டில் முக்கிய முடிவுகள் பலவும் பெண்களின் கருத்தைக் கேட்காமலேயே எடுக்கப்படுகின்றன. இத்தகைய போக்கு மாற வேண்டும். பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது மிக அவசியம்," என்றும் கனிமொழி மேலும் தெரிவித்தார்.