துறவறம் பூண்ட இரண்டு இளம்பெண்கள்

துறவறம் பூண்ட இரண்டு இளம்பெண்கள்

1 mins read

தி.மலை: இரு இளம் பெண்கள் துறவறம் மேற்கொண்ட நிகழ்வு திருவண்ணா மலையில் பல ரையும் ஆச்சரியப்பட வைத்தது. பிரக்ஷா, ஸ்வேதா ஆகிய அவ்விரு பெண்களும் சிறு வயது முதலே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக வளர்ந்தனர் என இருவரது குடும் பத்தாரும் தெரிவிக்கின்றனர். இருவரும் வசதியான குடும் பங்களைச் சேர்ந்தவர்களாவர். பிரக்ஷா எம்பிஏ பட்டதாரி ஆவார். மற்றொரு பெண்ணான ஸ்வேதா கணக்காய்வாளருக்கான உயர்படிப்பை (சிஏ) முடித்துள்ளார். ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இருவரும் துறவறம் தழுவ ஜெயி னலாஜி துறையில் படிப்பை முடிக்க வேண்டும் என்பது விதி முறை. இதை ஏற்று இருவரும் ராஜஸ்தானில் உள்ள கல்லூரியில் சேர்ந்து ஜெயினலாஜி படித்துள் ளனர். இதையடுத்து இருவரும் துறவறம் தழுவும் நிகழ்வு திருவண்ணாமலையில் சிறப்பாக நடைபெற்றது.