'விமான நிலையத்துக்கு நிலம் தேவை'

'விமான நிலையத்துக்கு நிலம் தேவை'

1 mins read

சென்னை: இரண்டாவது விமான நிலையம் அமைக்க சரியான இடத்தைத் தேர்வு செய்து தரும்படி தமிழக அரசிடம் கேட்டிருப்பதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய அந்த ஆணையத் தின் தலைவர் குருபிரசாத் மகா பாத்ரா, தமிழக அரசு நிலம் ஒதுக்கித் தரும் பட்சத்தில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். சென்னை விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு மற்றும் உள் நாட்டு முனையங்களுக்கு இடையே உள்ள பழைய கட்டடத்தை இடித்து 2100 கோடி ரூபாய் செலவில் இரு முனையங்களையும் ஒருங்கி ணைக்கும் பணி நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

"உதான் திட்டத்தின் கீழ் பல்வேறு நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. "நகரங்களில் அமைக்கப்பட் டது போல் சென்னையிலும் கொல் கத்தாவிலும் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளுடன் பேசி வருகிறோம்," என்றார் குருபிரசாத்.