சென்னையில் தீபாவளிச் சந்தை: போலிஸ் தீவிர கண்காணிப்பு

சென்னையில் தீபாவளிச் சந்தை: போலிஸ் தீவிர கண்காணிப்பு

1 mins read

சென்னை: தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை மட்டுமல்லாமல் தமி ழகம் முழுவதும் உள்ள முக்கிய கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் ஆவலில் பலர் தங்களுக்குத் தேவையான ஜவுளிப் பொருட்கள், வீட்டு உப யோகப் பொருட்களை ஏராளமாக வாங்கிச் செல்கின்றனர். சென்னையைப் பொறுத்தவரை தி.நகரில் உள்ள உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு உள் ளிட்ட இடங்களிலும் புரசைவாக் கம், அடையாறு, போரூர் உள்ளிட்ட இதர பகுதிகளிலும் உள்ள கடைகளில் தினமும் 5 மணிக்குப் பிறகு வாடிக்கையாளர் கூட்டம் களைகட்டுகிறது. இதையடுத்து அப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மேலும் சாதாரண உடை அணிந்த ரகசிய போலிசா ரும் மக்களோடு மக்களாகக் கலந்து கண்காணிப்பில் ஈடுபட் டுள்ளனர். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் 750 கண் காணிப்புக் கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளதாகவும், 3 சிறிய காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.