ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read

சென்னை: விரைவு ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக விடுக்கப்பட்ட மிரட்டல் காரணமாகச் சென்னையில் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக ஒருவர் கைதானார். நேற்று முன் தினம் இரவு சென்னையில் இருந்து அந்த ரயில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் அந்த ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை ரயில் நிலையத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய மர்ம நபர் தெரிவித்தார்.

இதையடுத்து விரைவு ரயில் விஜயவாடா ரயில் நிலையத்தில் நிறுத்தப் பட்டு அதில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. எனினும் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. இதற்கிடையே போலிஸ் விசார ணையில் மிரட்டல் விடுத்தவர் சென்னை விடுதியில் தங்கியிருந் தது கண்டுபிடிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்துக்கு அந்நபர் மதுபோதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.