சிங்கப்பூரிலிருந்து நூதன முறையில் தங்கம் கடத்தல்

சிங்கப்பூரிலிருந்து நூதன முறையில் தங்கம் கடத்தல்

1 mins read
Google News Preferred Icon

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப் பட்ட தங்கம், திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப் பட்டது. அதன் மதிப்பு 19 லட்சம் ரூபாய் ஆகும். நேற்று முன் தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் விமான நிலையத்தில் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது நாராயணன் என்ற பயணியின் உடைமைகளை சோத னையிட்டபோது அவர் கைப்பையில் வைத்திருந்த பேனாக்கள் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்தப் பேனாக்களை நவீன கருவிகள் கொண்டு ஸ்கேன் செய்தபோது அவற்றில் 599 கிராம் தங்கத்தை அவர் மறைத் திருப்பது தெரிய வந்தது. தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.