டி.ராஜா: ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன

டி.ராஜா: ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன

1 mins read
Google News Preferred Icon

சென்னை: நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள தாக இந்திய கம்யூனிஸ்டு தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், இத்தகைய நிலை ஏற்படுவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்புதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். "இன்றுள்ள மத்திய அரசு ஆர்எஸ்எஸ் தலைமையால் நடத் தப்படும் அரசாக உள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் கூட்டு மிகப்பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி உள் ளது. இந்த நிலையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்," என்றார் டி.ராஜா.

ரஃபேல் போர் விமான ஊழல் பிரதமர் மோடி ஆட்சியில் நடை பெற்ற மிகப்பெரிய ஊழல் என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக ஏராளமான ஆதாரங்கள் வெளிந்த வண்ணம் உள்ளதாகத் தெரிவித் தார். சிபிஐ மீதான மதிப்பு, நம்பகத்தன்மையை மத்திய அரசு சீர்குலைத்துள்ளது என்றும் அவர் சாடினார். 5 மாநிலத் தேர்தலில் பாரதிய ஜனதா படுதோல்வி அடையும் என்று தெரிவித்த அவர், அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக் கான அணிச்சேர்க்கை உருவாகும் என்றார்.

"பாஜகவும் மத்திய அரசும் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசத் தயாராக இல்லை. தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. "ராமர் பிரச்சினையையும் இந்துக்களையும் அரசியல் ஆதா யத்துக்காகப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் கூட்டாகச் செயல்படுகின்றன," என்றார் டி. ராஜா. சபரிமலை விவகாரத்தை வைத்து தமிழகத்திலும் கலவ ரத்தைத் தூண்ட பாஜக சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.