கைபேசியில் பேசியபடி பேருந்து ஓட்டிய 50 பேர் வேலையிலிருந்து தற்காலிக நீக்கம்

1 mins read

சென்னை: கைபேசியில் பேசிய படியே பேருந்துகளை இயக்கிய ஓட்டுநர்கள் 50 பேரை சென்னை மாநகரப் போக்குவரத்து அதிகாரி கள் இடைக்காலப் பணிநீக்கம் செய்துள்ளனர். சென்னை மாநகரப் பேருந்து களை இயக்கும் ஓட்டுநர்கள் பலர் வாகனத்தை இயக்கியபடியே கைபேசியைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. சென்னை மாநகரில் எப்போ துமே போக்குவரத்து நெரிசல் காணப்படும். இருசக்கர வாகனங் கள், கார்களின் எண்ணிக்கை அண்மைய சில ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பரபரப்பான சாலைப் போக்குவரத்துக்கு இடையில் பேருந்துகளை இயக்கியபடியே ஓட்டுநர்கள் கைபேசியில் பேசுவது பயணிகளுக்கு அச்சத்தை ஏற் படுத்தி உள்ளது.

கைபேசி பயன்பாட்டால் ஓட்டுநர்களின் கவனம் சிதறி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பெரும்பாலான பயணிகள் அஞ்சுகின்றனர். இது தொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அண்மைய சில மாதங்களாக பல்வேறு புகார்கள் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்துப் புகார்கள் குறித்து விசாரணை நடத்திய உயரதிகாரிகள் முதற்கட்டமாக 50 ஓட்டுநர்களை இடைக்காலப் பணிநீக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து இதே தவற்றைச் செய்யும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நடவடிக்கையை பயணிகள் வரவேற்றுள்ளனர்.