தள்ளாத வயதில் பேனாவைக் கையில் பிடிப்பதற்கே தடுமாற்றமாக இருக்கலாம். ஆனால், 96 வயதிலும் தேர்வெழுதி, அதில் 98 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்ற மூதாட்டியும் இந்தியாவில் இருக்கிறார் என்பது பெரும் அதிசயமாகக் கருதப்படுகிறது. கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் கார்த்தியாயினி அம்மாள். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அம்மாநில எழுத்தறிவு இயக்கம் நடத்திய அட்சரலட்சம் எனும் எழுத்தறிவுத் தேர்வில் பங்கேற்றவர்களிலேயே மிகவும் வயதானவர் இவர்தான். வாசிப்ப திலும் எழுதுவதிலும் கணக்கிலும் ஒருவருக்கு எவ்வளவு தேர்ச்சி இருக்கிறது என்பதைச் சோதிப்பதே இந்தத் தேர்வின் நோக்கம். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.
இதில் எழுதுவதில் 40க்கு 38 மதிப் பெண்களைப் பெற்ற திருவாட்டி கார்த்தியாயினி அம்மாள், வாசிப் பிலும் கணக்கிலும் முழு மதிப் பெண்களைப் பெற்றார். பத்தாம் வகுப்பிற்கு இணை யான தேர்வில் தேர்ச்சி பெறத் தாம் இலக்கு கொண்டுள்ளதாக இவர் கூறினார். "அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிக் கிறது. தொடர்ந்து நான் படிக்க விரும்புகிறேன்," என்றும் இவர் சொன்னார். இப்போது நான்காம் வகுப்பிற்கு இணையான பாடத்தைப் படிக்கும் தகுதியைப் பெற்றுவிட்டதாகக் குறிப்பிட்டார் இவரது ஆசிரியை யான திருவாட்டி சத்தி. "கார்த்தியாயினி அம்மாளுக் குப் படிப்பில் அதிக நாட்டம் இருப் பதை அவர் பெற்ற மதிப்பெண் களைப் பார்த்தே அறிந்துகொள்ள லாம். படிப்பைத் தொடரவும் அவர் ஆர்வமாக இருக்கிறார்," என்றார் அவர்.

