மருத்துவமனைகளில் பரவி வரும் காய்ச்சல் அதிகரிப்பு

மருத்துவமனைகளில் பரவி வரும் காய்ச்சல் அதிகரிப்பு

1 mins read

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் மருத்துவமனை களில் ஒரு நோயாளியிடம் இருந்து மற்றொரு நோயாளிக் குக் காய்ச்சல் பரவுவது அதிக ரித்து வருவதாக அபாய சங்கு ஊதப்பட்டு உள்ளது. இந்தப் பரவல் காரணமாக நோயாளிகளைத் தனித்தனி வரிசையில் அமர்த்தி சிகிச்சை அளிக்கவேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கோரினார். தமிழகத்தில், டெங்கி, எச்1என்1 தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தாண்டில் டெங்கி காய்ச்சலுக்கு 2,700 பேர் பாதிக் கப்பட்டு உள்ளனர்;

ஐவர் மாண்ட னர். எச்1என்1 காய்ச்சலுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டு உள்ள னர். 15 பேர் உயிரிழந்து உள்ள னர். சளிக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சலுக்கு 10க்கும் மேற்பட் டோர் மாண்டுவிட்டனர். அரசு, தனியார் மருத்துவ மனைகளில் ஆயிரக்கணக்கா னோர் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பொதுப்பிரிவில் அனைத்து நோயாளிகளும் ஒரே வரிசையில் நின்று சிகிச்சை பெறுவதால் தொற்று அபாயம் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.