இத்தாலிக்கு தமிழக வாழைப்பழம் ஏற்றுமதி

சென்னை: தமிழ்நாடு, ஐரோப்பா விற்கு உயர்தர வாழைப்பழ ஏற்று மதியைத் தொடங்கி இருக்கிறது. இத்தாலிய தொழில்நுட்பத்துடன் பயிரிடப்படும் அந்த வாழை முத லில் இத்தாலிக்கு போகிறது. பிறகு இதர ஐரோப்பிய நாடு களும் தமிழ்நாட்டில் விளையும் வாழைப்பழத்தை ருசிக்கும். இத்தாலி நாட்டின் போர்ட் ஆஃப் டிரஸ்டி என்ற அமைப்பின் நிதி உதவியுடன் கோயம்புத்தூரில் இருக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வாழை விவசாயிகள் கூட்டமைப் புடன் சேர்ந்து புதிய தொழில்நுட் பத்தின்படி வாழைப்பழங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது.

அந்தப் புதிய முறைப்படி வாழையை பாதிப்பு ஏதுமின்றி சுகாதார ரீதியில் கையாள முடியும். இத்தாலிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செவ்வாழை, பூவன் உள்ளிட்ட பலவகை வாழைப்பழங் கள் ஏற்றுமதிக்குத் தயார் செய்யப் படுகின்றன. இத்தாலிய தொழில்நுட்பம் தேனி மாவட்டத்தில் இருக்கும் கூடலூர் பண்ணையில் அமைக்கப் பட்டு இருக்கிறது. முதன்முதலாக சுமார் 400 கிலோ வாழைப்பழம், இத்தாலியில் இருக்கும் யுடின் பல்கலைக்கழகத் திற்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து ஆக்ககரமான முடிவுகள் வெளியாகி இருக்கின் றன.

அதனையடுத்து இத்தாலிக்கு முதன்முதலாக வாழைப்பழம் ஏற்று மதியாகிறது என்று தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. வாழைப்பழங்களை ஏற்றிக் கொண்டு நேற்று கொச்சி துறை முகத்திலிருந்து ஒரு கப்பல் இத்தாலியின் டிரஸ்டி துறைமுகத் திற்குப் புறப்பட்டது. அந்தக் கப்பல் 24 நாட்களில் அங்கு சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!