போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

1 mins read

புதுடெல்லி: பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் போபர்ஸ் பீராங்கி ஊழல் வழக்கை மீண்டும் விசாரணை செய்ய அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில் ஸ்வீடனிலிருந்து இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்குவதற்காக போபர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரூ.1437 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அரசியல் தலைவர்கள் பலருக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பல மூத்த காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களும் அடிபட்டன. சிபிஐ விசாரித்த இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2005ஆம் ஆண்டு வழக்கை ரத்து செய்தது. சிபிஐ தரப்பில் 4,500 நாட்களுக்கும் மேலாக இத்தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யப்படாத நிலையில் அண்மையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது. மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐயின் கோரிக்கையை ரத்து செய்தது.