அறுந்து தொங்கிய பாதத்தை ஒட்டவைத்து சாதனை

அறுந்து தொங்கிய பாதத்தை ஒட்டவைத்து சாதனை

1 mins read

மும்பை: ஜுஹு பகுதியில் உள்ள ஆர்.என். கூப்பர் மருத்துவமனை யில் 27 வயது இணையர் ஒரு வரின் வெட்டப்பட்ட வலது பாதத்தை அறுவைசிகிச்சை மூலம் மருத்துவர்கள் ஒட்டவைத்துள் ளனர். சுமார் 15 கிலோ எடையுள்ள கான்கிரீட் வெட்டும் இயந்திரம் குஞ்சா தாஸ் எனும் அந்த இளையரின் வலது பாதத்தின் மீது விழுந்தது. தாசின் வலது காலில் இருந்த ரத்த நாளங்கள், நரம்புகள், எலும்பு கள், தசைநாண் போன்றவை வெட்டுப்பட்டிருந்தன.

காலிலிருந்து அறுந்து பாதம் தொங்கிக்கொண்டி ருந்தது. அறுவைசிகிச்சை நிபுணர்கள், எலும்பு மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் ஆகியோரின் ஆறு மணி நேர முயற்சியில் தாசின் பாதத்தை காலுடன் இணைத்தனர். செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நேர்ந்த இந்த சம்பவத்தால் பாதிக் கப்பட்ட தாசால் இப்போது எழுந்து நடக்க முடியாவிட்டாலும் பாதத்தில் உணர்வுகள் தோன்ற ஆரம்பித் திருப்பதாகக் கூறப்படுகிறது. தாஸ் விரைவில் எழுந்து நடமாட ஆரம்பிப்பார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரி வித்துள்ளனர்.