'மோடியின் ஊழலுக்கு ஆதாரம்'

'மோடியின் ஊழலுக்கு ஆதாரம்'

2 mins read

புதுடெல்லி: ஊழல் குற்றச்சாட்டில் பிரதமர் மோடிக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ரஃபேல் போர் விமானம் தொடர்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லியில் உள்ள காங் கிரஸ் தலைமையகத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய திரு ராகுல் காந்தி, டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தற்காப்பு நிறுவனத்துக்கு ரஃபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. "ஆனால், டஸ்ஸால்ட் ஏவி யேஷன் வழங்கிய பணத்தைக் கொண்டு அனில் அம்பானி நிலத்தை வாங்கியதாகத் தெரிய வந்துள்ளது," என்று திரு ராகுல் குறிப்பிட்டார்.

"நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்துக்கு டஸ்ஸால்ட் நிறுவனம் ரூ. 284 கோடியை வழங்கியது ஏன்? டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஏன் பொய்யுரைக்கிறார்? அவர் யாரைப் பாதுகாக்கிறார்?" என்று திரு ராகுல் கேள்விகளை எழுப்பி உள்ளார். "ரஃபேல் ஒப்பந்தம் மோடி, அனில் அம்பானி ஆகிய இரு வருக்கும் இடையிலானது," என்று கூறிய திரு ராகுல் காந்தி "மோடி நேரடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

அப்போதைய தற்காப்பு அமைச்சர் மனோகர் பரிக்கார் அல்ல," என்றும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் அனுமதி பின்னர் பெறப் பட்டுள்ளது என்றும் இந்த ஒப்பந் தத்திலிருந்து மனோகர் பரிக்கர் விலகி இருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார். கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையை மேற் கொண்டால், ஊழல் தொடர்பான பல தகவல்கள் வெளியாகும் என்றும் ராகுல் கூறியுள்ளார். "மத்திய புலனாய்வுத் துறைத் தலைவருக்கு இது தெரியும் என்ப தால் அவர் பணியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். பிரதமர் பயந்திருக் கலாம்," என்றும் அவர் கூறியுள்ளார். குற்றச்சாட்டுக்கு ஆதரவாக திரு ராகுல் ஆவணங்கள் எதையும் வெளியிடவில்லை.