பாட்னா: பீகார் மாநிலத்தில் பாட்னா நகரில் முகாம் ஒன்றில் போலிஸ் அதிகாரிகளாகப் பயற்சி பெற்று வரும் சுமார் 400 பேர் பெரும் கலவரத்தில் ஈடு பட்டு அதிகாரிகளைக் கண்ட படி தாக்கினார்கள். சவிதா பத்தாக், 22, என்ற சக பயிற்சியாளர் ஒருவருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டு இருந்ததாகவும் அவருக்கு விடுமுறை அளிக்க மறுத்த அதிகாரி ஒருவர் அந்த நோயாளியைப் போக்குவரத்துப் பணியில் ஈடுபடுத்தியதாகவும் அதன் காரணமாக அந்தப் பயிற்சியாளர் மாண்டுவிட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சக பயிற்சி யாளர்கள், பெரும் கலவரத்தில் ஈடுபட்டார்கள். போலிஸ்காரர் களாகப் பயிற்சி பெற்று வந்த வர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். பாட்னாவில் லோதிப்பூர் என்ற பகுதியில் போலிஸ் முகா முக்கு வெளியேயும் கலவரம் பரவி யது. நான்கு மணி நேரம் நீடித்த அந்தக் கலவரத்தில் பல போலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்துவிட் டார்கள். பொதுமக்களில் 10 பேர் காயம் அடைந்தனர்.

