புதுடெல்லி: இந்தியா, அடுத்த ஆண்டில் உலகின் 5வது ஆகப் பெரிய பொருளியல் நாடாக உரு வெடுக்கும் என்று இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம் பிக்கை தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா முன்னேறும் என்றும் அவர் கூறினார். புதுடெல்லியில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அருண் ஜெட்லி, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடு கள் பெரும் பொருளியல் நாடு கள் வரிசையில் இடம்பெற்று இருப்பதைச் சுட்டினார். பிரிட்டனில் பொருளியல் மந்த நிலை காணப்படுவதால் 2019ல் 5வது இடத்தில் உள்ள பிரிட் டனை ஆறாவது இடத்துக்கு பின் னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத் துக்கு இந்தியா முன்னேறிவிடும் என்று நிதி அமைச்சர் கூறினார்.
கடந்த 2017ஆம் ஆண்டில் 6வது இடத்தில் இருந்த பிரான்சை 7வது இடத்துக்குப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்துக்கு இந்தியா முன்னேறியதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் பொருளியலில் முன்னணியில் உள்ள முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந் தியா இருக்கும் என்றும் அமைச்சர் கணித்துக் கூறினார். கடந்த நான்கு ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் எளிதில் தொழில் செய்வதற்கு உகந்த நாடுகளின் தரவரிசையில் 65 புள்ளிகள் முன்னேறி 77வது இடத்தை இந்தியா எட்டியுள்ளது. இந்த வரிசையில் முதல் 50 நாடுகளுக்குள் இந்தியா வர வேண்டும் என்ற இலக்கை நிர்ண யித்து, பிரதமர் மோடி பாடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

