மதுரை: சிவகங்கையில் புறம் போக்கு நிலத்தை ரூ. 25,000க்கு விற்ற போலி துணை ஆட்சியர் அண்ணாதுரை, 71, என்பவர் கைது செய்யப்பட்டார். "அண்ணாதுரை சென்னை மயிலாப்பூரில் 2002ல் துணை தாசில்தாராக இருந்ததாகவும் விருப்ப ஓய்வு பெற்றதாகவும் கூறுகிறார். துணை ஆட்சியர் எனக் கூறிக்கொண்டு அவர் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதற்குப் போலி முத்திரைகளை யும் அவர் தயாரித்துள்ளார். "பலரையும் அவர் ஏமாற்றி இருக்க வாய்ப்பு உள்ளது. பாதிக் கப்பட்டோர் புகார் தெரிவிக்க லாம்," என்று போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணாதுரை ஐந்து பேரை மோசடி செய்துவிட்டதாக போலி சிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த மோசடி விவ காரம் அம்பலமாகியது.
அரசு நில விற்பனை மோசடி: போலி துணை ஆட்சியர் கைது
1 mins read

