கோடானுகோடி மதிப்புள்ள சிலையைத் திருட முயற்சி

கோடானுகோடி மதிப்புள்ள சிலையைத் திருட முயற்சி

1 mins read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள மிகவும் பழமை வாய்ந்த உத்திரகோசமங்கை கோயில் மரகத நடராஜர் சிலையைத் திருட நேற்று நடந்த முயற்சி முறியடிக்கப் பட்டது. கோடானுகோடி ரூபாய் மதிப்புள்ள, ஐந்தடிக்கும் அதிக உயரம் உள்ள மரகத நடராஜர் சிலை தப்பியது. இந்தச் சம்பவத்தில் அந்தக் கோயில் காவலாளியான செல்ல முத்து என்பவரின் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. மிகவும் பிரபலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தோன்று வதற்கு முன்பிருந்தே உத்திரகோச மங்கை கோயில் இருந்து வருகிறது.

உத்திரகோசமங்கை கோயி லில் வழிபட்ட பின்னர்தான் ராவ ணனுக்குத் திருமணப் பேறு ஏற் பட்டதாகவும் ராவணனின் வழி காட்டுதலின்படி, மண்டோதரி இத் தல இறைவனையும் இறைவியை யும் வழிபட்டு புத்திரப் பேறு அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இத்திருத்தலத்தில் உள்ள மரகத நடராஜர் சிலை மிகவும் புகழ் வாய்ந்ததாகும். ஐந்து அடிக் கும் மேல் உயரம் கொண்ட இந்த மரகதத் திருமேனியை மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தின்போது மட்டுமே காணமுடியும். மற்ற நாட்களில் சந்தனக் காப்பு அலங் கார காட்சியைத்தான் பார்க்கலாம்.