சென்னை: கஜா சூறாவளியைச் சமாளிக்க அதிமுக அரசு செய்த முன்னேற்பாடுகளை எதிர்க் கட்சிகள் பாரபட்சமின்றி பாராட்டி யிருப்பதால் தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அதிமுக அரசு உற்சாக மடைந்துள்ளது.
தமிழக அரசின் செயலை மு.க. ஸ்டாலின், ராமதாஸ், கமல் உள்ளிட்டோர் பாராட்டிய நிலை யில் தமிழக அரசையும் அமைச்சர் களையும் எப்போதும் கடுமையாக விமர்சித்துவரும் டிடிவி தின கரனும் அரசின் முன்னேற்பாடு களை பாராட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "தமிழக அரசு சரியாக முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுத்து புயல் பாதிப்பில் இருந்து மக்கள் உயிர் பலியைத் தடுத்துள்ளதை பாராட்ட வேண்டும்," என்றார். அதே சமயத்தில் பாதிக்கப் பட்ட மக்களின் வாழ்வாதாரங் களை மீட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். "மத்திய அரசுடன் இவர்கள் இணக்கமாகத்தானே இருக் கிறார்கள், கிளை அலுவலகம் தானே இது. நாம், அடிமைகள் என்கிறோம், அவர்கள் சுமூக மான உறவு என்கிறார்கள்.
ஆகவே அந்தச் சுமூகமான உறவைப் பயன்படுத்தி மக்க ளுடைய வாழ்வாதாரத்தை மீட்க உதவவேண்டும்," என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். முன்னதாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "வானிலை ஆய்வு மையம், புயல் எச்சரிக்கையை வெளியிட்டதும் தமிழக பேரிடர் மேலாண்மை வாரியம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது," என்றார்.

