கஜா சூறாவளி கடக்க நான்கு மணி நேரமானது

கஜா சூறாவளி கடக்க நான்கு மணி நேரமானது

2 mins read

சென்னை: ஒன்பது நாட்களாக வங்கக் கடலில் மையம் கொண் டிருந்த கஜா சூறாவளி முழுமை யாக கரையை கடந்து செல்வதற்கு நான்கு மணி நேரமானது. அந்த சமயத்தில் அது 165 கி.மீ. வேகத்தில் வீசி நிலப்பகுதி களை சூறையாடியது. 'யானை' எனப் பொருள் கொண்ட 'கஜா' மெதுவாக நகர்ந் தாலும் வலுவாக கரைப் பகுதி களை கடந்து சென்றுள்ளது. வியாழக்கிழமை மாலை நாகைக்குக் கிழக்கே 150 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இரவில் காற்றையும் மேகக் கூட்டங்களையும் கொண்ட முன் பகுதி 11:00 மணிக்குக் கரையைத் தொட்டது. பின்னர் தீவிரப் புயலாக மாறியது.

கடலூர், புதுச்சேரி முதல் பாம்பன் வரையிலும் 120 கி.மீ. சுற்றளவை கொண்டிருந்த புயலின் உள்பகுதி சரியாக 12:30 மணிக்கு நாகை மாவட்ட கடல் பகுதியை அடைந்தது. அதன்பின் 26 கி.மீ. விட்டம் கொண்டிருந்த கண் பகுதியும் புயலின் பின் பகுதியும் வேதா ரண்யம் அருகே கரைக்குள் பாய்ந் தது. இந்தத் தருணத்தில் 165 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. சரியாக 3:00 மணிக்குப் புயலின் பெரும் பகுதி கரை கடந்தது.

கஜா புயலின் கண் பகுதி, நீரும் காற்றும் மேகக் கூட்டங்களும் நிறைந்து கண் திறக்காத நிலை யில் இருந்தது. இதை நாசாவின் செயற்கைக் கோள் படம் எடுத்துள்ளது. இதனால்தான் கண் பகுதி கடந்தபோது காற்றும் மழையும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கரையைக் கடந்த கஜா புயல், அதிராம்பட்டினத்தை நெருங்கி யதும் வலுவிழந்தது.