சென்னை: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 'கஜா' புயல் கரையைக் கடந்து விட்டது. ஆனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஐம்பதுக்கும் மேற் பட்டோர் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் வங்கக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இது குறித்து விளக்கம் அளித்த சென்னை வானிலை ஆய்வு மைய துணைப் பொது இயக்குநர் பாலச்சந்திரன், "கஜா புயல் நாகைக்கும், வேதாரண்யத் துக்கும் இடையில் கரையைக் கடந்த நிலையில் திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் வழியே கேரளாவை நோக்கி நகரும்," என்றார். பின்னர் கஜா புயல் அரபிக் கடலுக்குள் நுழையும். அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் உள் ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாகப்பட்டினத்தில் உள்ள ரயில் நிலையத்தில் சூறாவளிப் புயல் வீசியதில் மேற்கூரைகள் பிரித்து எறியப்பட்டன. படம்: ஏஎஃப்பி

