1,000 கிலோ நாய்க்கறி பறிமுதல்

1,000 கிலோ நாய்க்கறி பறிமுதல்

1 mins read

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆயிரம் கிலோ நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள் ளது. ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலை சோதனையிட்ட ரயில்வே காவல் துறை, உணவு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் 1,000 கிலோ நாய்க்கறியைப் பறிமுதல் செய்த னர். எழும்பூர் நிலையத்தின் 5வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ரயிலில் இருந்து நாய்க்கறி இறக்கி வைக்கப்பட்டிருந்தது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் இருந்து ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பப்பட்ட இந்த நாய்க்கறியைப் பெற்றுக்கொள்ளும் நபரின் முகவரியை காவல்துறை யினர் கண்டுபிடித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த 'கறி கணேஷ்' என்பவரின் பெயரில் நாய்க் கறி அனுப்பப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. சென்னையில் உள்ள பெரிய ஹோட்டல்களுக்கு அவர் இறைச்சி விநியோகித்து வரு வதாகக் கூறப்படுகிறது. இதனால் சென்னையின் உள்ள பிரபல ஹோட்டல் சமையல்களில் நாய்க் கறி பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விசாரணையில் எந்தெந்த உணவகங்களில் பிரியாணியோடு நாய்க்கறி பரிமாறப்பட்டது போன்ற விவரங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நேற்று பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரம் கிலோ நாய்க்கறியை புதைத்து அழிக்க சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ள னர். இதற்கு முன்பு இந்த அளவுக்கு நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்ட தில்லை.