இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் தென் மாநில மக்கள்

இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் தென் மாநில மக்கள்

1 mins read

சென்னை: இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளில் 25 விழுக்காட்டினர் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று இஸ்ரேல் சுற்றுலா அமைச்சின் சந்தைமய இயக்குநர் ஜுதா சாமுவேல் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும் அவர் சொன்னார். 2016ல் 30,800 பேர் வருகை தந்தனர். இது, நடப்பாண்டு செப்டம்பர் வரை 48,800 ஆக உள்ளது. இது, இரண்டு ஆண்டுகளில் 58 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.