பட்டாசு தொழிற்சாலைகளை மூட உரிமையாளர்கள் முடிவு

பட்டாசு தொழிற்சாலைகளை மூட உரிமையாளர்கள் முடிவு

1 mins read

சிவகாசி: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளால் இனி பட்டாசு தொழிற்சாலைகளை நடத்தும் சாத்தியம் இல்லை என்று சிவகாசி யில் உரிமையாளர்கள் அறிவித் துள்ளனர். இதனால் தொழிற்சாலைகளை மூடுவதாகவும் அவர்கள் கூறியுள் ளனர். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வரு கின்றன. இந்த நிலையில நாடு முழு வதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி 2015ல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதையொட்டி கடந்த 23, 31ஆம் தேதிகளில் வெளியிடப் பட்ட இடைக்காலத் தீர்ப்பில் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்குத் தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் பட்டாசு தயாரிக்க முக்கிய மூலப் பொருளாகப் பயன் படுத்தப்படும் பேரியத்துக்கும் சர வெடி தயாரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் அனைத்துப் பட்டாசு ஆலைகளிலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.