கஜா: அமைச்சர்களுடன் களம் இறங்கும் முதல்வர் பழனிசாமி

கஜா: அமைச்சர்களுடன் களம் இறங்கும் முதல்வர் பழனிசாமி

2 mins read
ebc6f745-f467-40ca-89f1-885106c2d6ce
-

மிழ்நாட்டில் கஜா புயல் பாதித்த வட்டாரங்களில் நிவாரணப் பணி கள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் நேரடியாக முகா மிட்டு இருக்கிறார்கள். 12,000 மின்சாரத்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராமல் செயல்பட்டு வரு கிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் பழனிசாமி புயல் பாதிப்பு வட்டாரங்களை இன்று அல்லது நாளை பார்வையிடுவார் என்றும் அதற்கு முன்னதாக அவர் ஆய்வுக் கூட்டம் ஒன்றை சென்னையில் நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை ஒருங் கிணைக்க கூடுதலாக 11 அமைச் சர்களை முதல்வர் நியமித்தார். நாகை மாவட்டத்தில் கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத், பெஞ்ச மின் ஆகியோரும் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், உடு மலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோரும் களத்தில் குதித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் செல் லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் எம்.ஆர். விஜயபாஸ் கர், கே.சி. கருப்பணன், பாஸ்கரன் ஆகிய அமைச்சர்களும் ஏற் கெனவே முகாமிட்டுள்ள அமைச்சர் களுடன் சேர்ந்து பணியில் ஈடு பட்டு வருகிறார்கள்.

இதனிடையே, முதல்வர் பழனிசாமி சனிக்கிழமையன்று கஜா புயல் பற்றி பல விவரங்களைத் தெரிவித்தார். புயல் அடிப்பதற்கு முன்பாக 240,000 பேர் பாதுகாப் பான இடங்களுக்கு அப்புறப்படுத் தப்பட்டதாகவும் 82,000 பேர் 471 நிவாரண முகாம்களில் தங்கவைக் கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் படுத்திய பாட்டில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. 12,000 மின்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராமல் இந்தப் பாதிப்புகளைச் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. பல இடங்களிலும் மின்கம்பங்களின் மேல் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்திருப்பதால் அவற்றையும் வெட்டி அகற்றவேண்டிய தேவை இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். படம்: இந்திய ஊடகம்