இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் அருகே இருக்கும் அட்லிவால் என்ற கிராமத்தில் நீரன்கரிபவன் என்ற வழிபாட்டு அரங்கில் நேற்று குண்டு வெடித் ததில் மூவர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் நிகழ்ந்த இடம் அனைத்துலக விமான நிலையத் திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மோட்டார்சைக்கிளில் முகமூடி அணிந்துகொண்டு வந்த இரண்டு பேர் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு மிரட்டியபடியே வேகமாக அந்த அரங்கிற்குள் சென்றதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அங்கு 500 பேர் சமய வழிபாட் டில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி அந்த இருவரும் கையெறி குண்டை வீசினர். அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் 10 பேர் காயம் அடைந்தனர். மாண்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டு இருக்கின்றன. பிரத்தியேக படச்சாதனங்களைப் பயன்படுத்தி தாக்குதல்காரர்களை அதிகாரிகள் அடையாளம் காண முயன்று வரு கிறார்கள்.
இதனிடையே, மாண்டவர்களின் குடும்பத்தாருக்கு 500,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அறிவித்தார். பஞ்சாப் மாநிலத்திற்குள் ஆறு முதல் ஏழு பயங்கரவாதிகள் புகுந்து இருப்பதாக அந்த மாநில போலிஸ் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அந்தச் சூழ்நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குண்டு வெடிப்பை அடுத்து அந்தக் கிராமமே சுற்றி அடைக்கப் பட்டு இருக்கிறது. தேடுதல் வேட்டை பெரிய அளவில் நேற்றுத் தொடங்கியது. இதனிடையே, மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல்வருடன் பேசினார். அவர் பல நிலவரங்களையும் கேட்டறிந்தார்.

