மதுராவில் யானைகளுக்கான முதல் மருத்துவமனை

1 mins read
c3bee4e7-b403-40b9-9206-8769ed4a17a7
-

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா அருகே உள்ள சுர்முரா கிராமத்தில் யானைகளுக்கான இந்தியாவின் முதல் மருத்துவ மனை கடந்த வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் யானைகளுக் கான 'டிஜிட்டல் எக்ஸ்ரே' உட்பட பல்வேறு நவீன மருத்துவ வசதி கள் செய்யப்பட்டுள்ளன. யானை களைத் தூக்கிச் செல்வதற்கான கருவி, டிஜிட்டல் எடை இயந்தி ரம், நீண்ட நாட்களுக்குத் தேவை யான சிகிச்சையை மேற்கொள்வ தற்கான சிகிச்சைப் பிரிவு, ஆய்வகம் உட்படப் பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காகவும் யானைகளின் பழக்கவழக்கங்களைத் தெரிந்துகொள்ளவும் பாதுகாப் பான கண்காணிப்புத் தளமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுவொரு சுற்றுலாத் தளமாக வும் புகழ் பெற்று வருகிறது. இப்படத்தில் பூல்கலி என்ற பெண் யானையின் காலில் 'எக்ஸ்ரே' எடுக்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்