மோடி: சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த மாலத்தீவிற்கு இந்தியா உதவும்

மோடி: சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த மாலத்தீவிற்கு இந்தியா உதவும்

1 mins read
402ce30c-82b8-4874-adfc-e6ce8802846b
-

மாலி: மாலத்தீவு அதிபர் பதவி யேற்பு விழாவில் கலந்துகொள் வதற்காக அங்குச் சென்ற மோடி சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப் படுத்த இந்தியா துணை நிற்கும் என்று உறுதி அளித்தார். மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக மாலத்தீவு செல்வது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் நடந்த இந்த விழாவில் மாலத்தீவின் ஏழாவது அதிபராக 54 வயது இப்ராகிம் முகமது சாலிக் பதவியேற்றுக் கொண்டார். மாலத்தீவில் சீனா பல மில்லி யன் டாலர்களை முதலீடு செய்து சாலைகள், வீடுகள் கட்டுவதற்கு உதவியுள்ளது. இதன் பிரதிபலனாக அது மாலத்தீவின் மீது மிகப்பெரிய சுமையை அழுத்தி செல்வத்தைச் சூறையாடிக் கொண் டிருப்பதாக அந்நாட்டுத் தலைவர் கள் குமுறுகின்றனர்.

இத்தகைய சூழலில் புதிய அதிபர் இப்ராகிம் முகமது சாலிக் குடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையில் மாலத்தீவுக்குப் பொருளாதார உதவிகள் அளிக்க உறுதியளித்துள்ளார். மாலத்தீவுக்குப் பயணமாகும் முன்பு மோடி அடுத்தடுத்து வெளி யிட்ட தனது டுவிட்டர் பதிவில், "புதிய அதிபருக்கு வாழ்த்துகள். மாலத்தீவின் வளர்ச்சிக்கு இந் தியா உறுதுணையாக இருக்கும். குறிப்பாக உள்கட்டமைப்பு, சுகா தாரம், தொலைத்தொடர்பு, மனித வள மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும்," என்று குறிப்பிட்டு இருந்தார்.

மாலத்தீவின் ஏழாவது அதிபராக பதவியேற்றுக்கொண்ட இப்ராகிம் முகமது சாலிக்கிற்கு வாழ்த்துக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படம்: ஏஎஃப்பி